இதைத்தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தில் அனுரக் கஷ்யப் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரிவெஞ்ச் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், அருள் தாஸ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ‘காந்தாரா’ படத்தின் இசயமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் ரிலீஸ் ஆகுமெனத் தெரிகிறது.