இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில், நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் ‘செவ்வாய்கிழமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. 90களில் நடக்கும் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. அதுபடி, மலையாளத்தில் ‘சூவ்வழ்ச்சா’, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ‘மங்களவாரம்’, தமிழில் ‘செவ்வாய்கிழமை’ எனும் பெயர்களில் உருவாகிறது.