’ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் கொடுப்பதில்லை’- பிரியங்கா சோப்ரா ஆதங்கம்

’ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் கொடுப்பதில்லை’- பிரியங்கா சோப்ரா ஆதங்கம்
’ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் கொடுப்பதில்லை’- பிரியங்கா சோப்ரா ஆதங்கம்

எனது 22 வருட சினிமா வாழ்க்கையில் இதை அற்புதமான விஷயமாக கருதுகிறேன்

இந்தியா சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் மற்ற நடிகர்களுக்குக் கிடைப்பதில்லை எனப் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் கதாநாயகர்களை விடக் கதாநாயகிகளுக்குப் பல மடங்கு சம்பளம் குறைவாகக் கொடுக்கப்படுவதாகத் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக இவை ஏற்கப்படுவதும் இல்லை. இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா முதல் தடவையாக ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், “நான் முதல் தடவையாக ஹீரோவுக்குச் சமமான சம்பளம் பெற்று இருக்கிறேன். எனது 22 வருட சினிமா வாழ்க்கையில் இதை அற்புதமான விஷயமாகக் கருதுகிறேன். இந்தி படங்களில் நடிக்கும் போது கொஞ்சம் அதிகம் சம்பளம் கேட்க வேண்டும் என்றாலே மிகவும் பயப்படுவேன்.ஆனாலும் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கும் போது சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறாராகவே இருந்தேன். மேலும் எனது சக நடிகருக்கும் சமமான சம்பளம் வேண்டும் என்று கேட்டேன். ஆனால் ஏதோ அதிசயம் நடந்த மாதிரி அவர்களும் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தைக் கொடுக்க உடனே ஒப்புக்கொண்டனர்.இந்த சம்பவத்தை இப்போதுகூட என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com