தமிழக அரசுக்கு ஆர்.கே.செல்வமணி கோரிக்கை!
தனியார் நிறுவனம் நடத்திய கலந்தாய்வில் கலந்துகொண்ட ஃபெஃப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில் பேசிய அவர், ‘’ஆர்.ஆர்.ஆர்.’, ‘பொன்னியின் செல்வன்’ ,’ கேஜிஎஃப்’,’வாரிசு’,’துணிவு’,’புஷ்பா’,’காந்தாரா’,’விக்ரம்’ ஆகிய பத்து படங்கள் தமிழக அரசுக்கு 1000கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
மேலும், பல விதத்தில் தமிழக அரசுக்கு திரைப்படத்துறையால் வருமானம் வந்துள்ளது. இருப்பினும் ஃபெஃப்சிக்கு சரியான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. இதுவரை ஃபெஃப்சி 50,000 படங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது. ஆகையால், தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு திரைப்பட மேம்பாட்டு கழகம் ஒன்றை அமைத்து தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கலந்தாய்வில், உதயநிதி ஸ்டாலின், வெற்றி மாறன், ரிஷப் ஷெட்டி, மஞ்சு வாரியர், அல்லு அரவிந்த், கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.