தனுஷ் நடிக்கவிருக்கும் வரலாற்று திரைப்படம்...!
தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தை தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இதன்மூலம் வெகு ஆண்டுகளுக்க் பிறகு வுண்டர்பார் பிலிம்ஸ் மீண்டும் தயாரிப்பில் இறங்கவுள்ளது.இந்நிலையில், இந்தப் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் அடம் ஒரு வரலாற்று திரைப்படமாகத் தான் இருக்குமென கோலிவுட் வட்டாரங்களில் பராலாகப் பேசப்படுகிறது. இந்தப் படம் மாரி செல்வராஜின் திரைவாழ்வில் மிக முக்கியமான அடுத்த கட்டமாக இருக்குமெனத் தெரிகிறது. மேலும், ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான ‘கர்ணன்’ படம் மாபெரும் வெற்றியடைந்தடையடுத்து இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.