வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி - விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக சூரி, துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதை தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் கதையை வெற்றிமாறனே எழுதுகிறார். சூரி தற்போது ’விடுதலை - 2’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு இந்தப் படத்தில் இணைவார் எனத் தெரிகிறது. மதுரையைக் கதைக் களமாகக் கொண்டு உருவாக உள்ள இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் ஏனைய நடிகர்கள் பற்றிய தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. சூரி தற்போது இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’, ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ போன்ற படங்களில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.