கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என ஏற்கனவே அறிவிப்புகள் வந்துவிட்டது.
கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என ஏற்கனவே அறிவிப்புகள் வந்துவிட்டது. ‘நாயகன்’ படத்திற்கு பிறகு ஏறத்தாழ 36 வருடங்களுக்கு பிறகு இந்தக் கூட்டணி சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இது கமல்ஹாசனின் 234 ஆவது படமாகும். எனவே, இதற்கு 'KH234' என்றே பெயறிட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது அந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாகப் பேசப்பட்டது.
இதற்கு முன்பு திரிஷா கமல்ஹாசனுடன், ‘மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’ ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். இதுவரை நயன்தாரா கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்ததில்லை. மேலும், இதே படத்தில் இரண்டு பேருமே நடிக்கவும் வாய்ப்புண்டு. அடுத்ததாக மணிரத்னத்தின் ‘பொன்ன்யின் செல்வன் -2’ வெளியாகவுள்ள நிலையில், இன்னும் இரண்டு மாதங்களுக்கு பின்னரே கமல்ஹாசனுடன் இணையும் படத்திற்கான பணிகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது.