இந்தியாவின் மிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று பிரபாஸின் ஆதிபுருஷ்’.
இந்தியாவின் மிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று பிரபாஸின் ஆதிபுருஷ்’. இந்தத் திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி நியூ யார்க்கின் திரிபெகா திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. ஓம் ரவுட் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், கீர்த்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் ராமனாக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்தப் படத்தின் கிரேபிக்ஸ் கார்டூனைப் போல் உள்ளது என பலரும் சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கினர். மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்தியாவெங்கும் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.