'எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'அவள் பெயர் ரஜ்னி' டீசர்

'எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'அவள் பெயர் ரஜ்னி' டீசர்
'எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'அவள் பெயர் ரஜ்னி' டீசர்

திரில் அனுபவம் தரும் அவள் பெயர் ரஜ்னியின் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'அவள் பெயர் ரஜ்னி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  பரபரப்பான திரில் அனுபவம் தரும்  அவள் பெயர் ரஜ்னியின் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராம்  நடிப்பில் வெளியாகும் இந்த திரைப்படம் விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு வெளியாகும் அடுத்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும்,  துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக  அவள் பெயர் ரஜ்னி உருவாகியுள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள டீசரில், ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள், காளிதாஸ் ஜெயராமின் அசத்தல் நடிப்பு என, ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும்  அட்டகாசமான த்ரில்லருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது. 

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில்  நடித்திருக்கிறார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை,பொள்ளாச்சி, கொச்சின் ஆகிய இடங்களில் நடைபெற்றது .படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது.  விரைவில் டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com