‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ - மீண்டும் ஸ்டார் விஜய்-இல்

‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ - மீண்டும் ஸ்டார் விஜய்-இல்
‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ - மீண்டும் ஸ்டார் விஜய்-இல்

‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ - என்ற நிகழ்ச்சி மீண்டும் ஸ்டார் விஜய்-யில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

தமிழகத்தின் மக்களிடையே நிலவும்  தமிழ் மொழியின் மீதான பற்று மற்றும் தமிழ் உணர்ச்சியை மேலோங்கச் செய்ய ஸ்டார் விஜய் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்பு நேயர்களுக்கு அறிமுகம் செய்து நடத்தி வந்தது. 

இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொடங்குகிறது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி.  இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 16 அன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழியில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கண்டுபிடிப்பதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை என பல இடங்களில் திறமையான தமிழ் சொற்பொழிவாளர்களுக்காக ஸ்டார் விஜய், மாநிலம் முழுவதும் தீவிர தேர்ச்சியை நடத்தியது. இந்த மாவட்டங்களில் இருந்து சுமார்  2500 க்கும் மேற்பட்ட திறமையாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதியில் முதல் இருபத்தைந்து போட்டியாளர்கள் இந்த மேடைக்கு வர உள்ளனர். இதேபோல் நிகழ்ச்சியின்போது கதை, கவிதை வாசிப்பு, விவாதம் மற்றும் சொற்பொழிவு என பல்வேறு சுற்றுகளை கடந்து செல்வார்கள். தமிழகத்தின் சிறந்த தமிழ் சொற்பொழிவாளருக்கு ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. 

புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களான டாக்டர் ஜி.ஞானசம்பந்தம் மற்றும் பர்வீன் சுல்தானா ஆகிய புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் நடுவர்களாக இடம்பெறுகின்றனர். இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் மற்றும் அனிதா சம்பத் (பிக் பாஸ் புகழ்) தொகுத்து வழங்குகிறார்கள். 

இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழிக்கு மரியாதை மற்றும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் நிகழ்ச்சியைப் பற்றி சில வார்த்தைகள் பேசினார் என்பது பெருமைமிகு செயலாகும்.  

மேலும் அவருடன் இணைந்து  ‘உலகநாயகன்’ பத்மஸ்ரீ கமல்ஹாசனும் மற்றும் அரசியல் பிரமுகர்கள்,  தொல்.திருமாவளன், அன்புமணி ராமதாஸ், வைகோ, அ.முத்துலிங்கம்,  நாஞ்சில் சம்பத், ஜெயமோகன் - எழுத்தாளர், பேச்சாளர் மதன் கார்க்கி ஆகியோரும் நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.  வரும் ஞாயிறு இடம்பெறும் முதல் நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com