’ருத்ரன்’ திரைப்படம் உலகமெங்கும் 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு வருடங்களுக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ருத்ரன்’.
இப்படம், ஏப்.14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தின் டப்பிங் ரைட்ஸ் தொகை விவகாராம் பெரிதாகி, இந்தப்படத்திற்கு நீதிமன்றம் வரும் ஏப்.21ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இப்படம் தடைகளை வென்று நாளை ரிலீஸாவது உறுதியாகியிருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு, இந்தப் படம் தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், இந்தப் படத்தின் தயாரிப்பு தரப்பில் நிகழ்ந்த டப்பிங் உரிமை விவகாராம் சுமூகமாக நிறைவடைந்துள்ளதாகத் தெரிகிறது. ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் ஆகியோர் நடிக்கும் கமர்சியல் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.