விடுதலை படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் உருவான ’விடுதலை பாகம்-1’ திரைப்படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் வரும் ஏப்.15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை சேர்த்து ஓடிடியில் விடுதலை அன்கட்டாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட பல காட்சிகளை நேரப் போதாமையால் நீக்கியதாகவும், அவைகள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகுமெனவும் பேசப்படுகிறது.
மேலும், இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸான ’விடுதலை’ படத்தை விட மிக வீரியமான தாக்கத்தை ஏற்படுத்துமெனத் தெரிகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.