வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘கஸ்டடி’ படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதண்யா நடிப்பில் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘கஸ்டடி’. இந்தப் படம் வரும் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வெங்கட் பிரபுவின் முதல் தெலுங்கு படமான இந்தப் படத்திற்கு முதன்முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து ‘ஹெட் ஹை அப்’ எனும் முதல் சிங்கிள் பாடல் வரும் ஏப்.10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கஸ்டடி’ படத்தில் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சுவாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜீ, வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத், ராம்கி ஆகியோர் நடிக்கின்றனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார்.