வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில் ‘ விடுதலை... இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு -பிரமிப்பு.
இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றி மாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். தற்போது ‘ஜெயிலர்’ பட படப்பிடிப்பில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் ரஜினிகாந்த், அதற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தில் இணையவுள்ளார். மேலும், ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் 4 மாதங்களில் வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.