மீண்டுமொரு விஞ்ஞானி பயோபிக்கில் மாதவன்

மீண்டுமொரு விஞ்ஞானி பயோபிக்கில் மாதவன்
மீண்டுமொரு விஞ்ஞானி பயோபிக்கில் மாதவன்

விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார்

இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஃபர்ஸ்ட் லுக்குடன் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர், நடிகர்கள் குறித்த எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவின் மாபெரும் பொறியாளர் மற்றும் விஞ்ஞானியான ஜி.டி.நாயுடு, கோயம்புத்தூரை வளப்படுத்தியவராவார். 

மேலும், இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டாரையும் கண்டுபிடித்தது இவர் தான். இதற்கு முன்பு ‘ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்’ எனும் படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தானே இயக்கி, நடித்து வெளியிட்டார் மாதவன். அதைத்தொடர்ந்து, தற்போது விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், ’திருச்சிற்றம்பலம்’ பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த படத்திலும் மாதவன் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com