நயன்தாராவின் 75 ஆவது திரைப்படத்தின் எடிட்டர் குறித்த தகவலை அப்படக்குழு தெரிவித்துள்ளது.
நயன்தாராவின் 75 ஆவது படமான ‘லேடிசூப்பர்ஸ்டார் 75’ படத்தை அறிமுக இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தப் படத்தில் ஜெய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்தப் படத்தின் படத்தொகுப்பாளர் பற்றிய தகவலை அப்படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படத்தை பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்யவுள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணன் இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராவார். 2019 லேயே தயார் செய்த இந்தக் கதைப் பற்றிய ஆராய்ச்சி வேலைகளுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டது எனத் தெரிவித்த இயக்குநர் நீலேஷ், இதை எழுதும் போதே நயன்தாராவை வைத்துதான் இந்தப் படத்தை எடுக்க வேண்டுமென தான் முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.