பா.ரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகுமென பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகுமென பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஏப்.7) தொடங்கிய பி.கே.ரோசி திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித், ‘தங்கலான் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தின் முக்கிய பகுதிகளை கே.ஜி.எஃபில் 55 நாட்கள் படம் பிடித்துள்ளோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக சவாலாக இருந்தது. அனைவரின் ஒத்துழைப்பினால் இதை முடித்துள்ளோம். படத்திற்கு விஎஃபெக்ஸ் வேலைகளுக்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள கோலார் கோல்டு ஃபீல்டு உருவான கதையை வைத்து உருவாகும் இந்தப் படத்தில் பார்வதி திருவொத்து, பசுபதி, மாளவிகா மோகனன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.