நயன்தாராவின் 75 ஆவது படத்தை அறிமுக இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கவிருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது.
நயன்தாராவின் 75 ஆவது படத்தை அறிமுக இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கவிருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் ஜெய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என அப்படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் நீலேஷ், இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இந்தப் படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவருமென தெரிகிறது. ஜெய்-யும், நயன்தாராவும் இதற்கு முன்பு அட்லியின் ‘ராஜா ராணி’ படத்தில் ஜோடியாக நடித்ததும் குறிப்பிடத்தக்கது.