ராகவா லாரன்ஸ் நடிப்பில், கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படத்தின் ட்ரெய்லர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில், கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படத்தின் ட்ரெய்லர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் வெகுநாட்களுக்கு பிறகு சரத்குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், நாசர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லரில் இது ஒரு முழுமையான ஆக்ஷன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.