‘சூர்யா 42’. இந்தப் படம் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மாபெரும் பட்ஜட்டில் உருவாகும் திரைப்படமாகும்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் ‘சூர்யா 42’. இந்தப் படம் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மாபெரும் பட்ஜட்டில் உருவாகும் திரைப்படமாகும். 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா படானி, மிர்னால் தாக்கூர், யோகி பாபு, ரெடின் கின்க்ஸ்லீ ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் 5 கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பெயர் ‘அக்னீஸ்வரன்’ என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இது ஒரு ஃபாண்டசி ஜானர் திரைப்படமாக உருவாகுவது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே மாதத்துடன் நிறைவடையுமெனத் தெரிகிறது.