‘வட சென்னை -2’ அப்டேட் தந்த வெற்றிமாறன்

‘வட சென்னை -2’ அப்டேட் தந்த வெற்றிமாறன்
‘வட சென்னை -2’ அப்டேட் தந்த வெற்றிமாறன்

ரசிகர்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு ஒரு வழியாக ‘வட சென்னை -2’ குறித்த அப்டேட் ஒன்றை இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

ரசிகர்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு ஒரு வழியாக ‘வட சென்னை -2’ குறித்த அப்டேட் ஒன்றை இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ருத்ரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றிமாறன், தான் அடுத்ததாக ‘வாடிவாசல்’ படத்திற்கு பிறகு ‘வட சென்னை -2’ படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதே தகவலை அவர் இயக்கத்தில் உருவான ‘விடுதலை -1’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

2018இல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வட சென்னை’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சி படமான ‘வடசென்னை -2’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது அந்தப் படம் குறித்த ஒரு அப்டேட்டை வெற்றிமாறன் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com