அருண் விஜய் நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கும் ‘மிஷன் சாப்டர் -1’ திரைப்படத்தின் டீசர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது
அருண் விஜய் நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கும் ‘மிஷன் சாப்டர் -1’ திரைப்படத்தின் டீசர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. வெகு நாட்களாக தயாராகி வரும் இந்தப் படத்திற்கு முதலில் ‘அச்சம் என்பது இல்லையே’ என்றே பெயரிடப்பட்டது. அதன் பின், லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை கையில் எடுத்தவுடன் இந்தப் படத்திற்கு ‘மிஷன் சாப்டர் -1’ எனப் பெயரிடப்பட்டது.
ஆக்ஷன் ட்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன் எமி ஜாக்ஷன், அபி ஹாசன், பாரத் போபண்ணா, பேபி இயல், மலையாள நடிகை நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படம் ‘கிரேட் இந்தியன் கிச்சன்’ புகழ் நிமிஷா சஜயனுக்கு தமிழில் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவிருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.