ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘லால் சலாம்’.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தொற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் தம்பி ராமய்யா ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தில் காமெடி நடிகர் செந்தில் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் ‘லால் சலாம்’ படத்திற்காக இரண்டு மாதங்கள் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளார்.
இவர் இடைத்தொடர்ந்து அவரது 170ஆவது படமான ‘தலைவர் 170’ஐ ‘ஜெய் பீம்’படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும், இதற்கு பின் அவர் நடிக்கும் கடைசி படம் எனச் சொல்லப்படும் அவரது ‘171’ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.