அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா -1’ இந்தியாவெங்கும் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது.
அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா -1’ இந்தியாவெங்கும் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது ‘புஷ்பா -2’ படத்திலிருந்து கிளிம்ஸ் வீடியோ ஒன்றை அப்படக்குழு வெளியிட்டுள்ளது.
‘where is pushpa..?' என்கிற பெயரில் வெளியிட்டுள்ள இந்த கிளிம்ஸ் வீடியோவில், ’ஜெயிலில் இருந்து தப்பித்த புஷ்பா எங்கே..?’ என்று அனைவரும் தேடுவதாகக் காட்டப்படுகிறது. மேலும், ஏப்ரல் 7ஆம் தேதி இந்தப் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகுமெனவும் இந்தக் காணொலியில் அப்படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் மேலும் ரஷ்மிகா மந்தானா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.