சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.
நடிகை நயன்தாரா தனது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் குலதெய்வம் கோயிலான தஞ்சை மாவட்டம், வழுத்துரில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் வழிப்பட்டார்.
தஞ்சை மாவட்டம், வழுத்தூரில் ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நடிகை நயன்தாராவின் கணவரும், திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவனின் குலதெய்வம். திருமணத்திற்கு முன் இருவரும் இந்த கோவிலுக்கு வந்த நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இன்று கோவிலுக்கு வந்தனர்.
இவர்கள் வருகையை ஓட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நொண்டி கருப்பு, முனியாண்டவர், மதுரைவீரன், அரியத்தங்கால் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, தீபம் காட்டி இருவரும் பயப்பக்தியுடன் வழிப்பட்டனர்.
மூலவர் சன்னதிக்குள் அபிஷேகம் நடப்பதை வீடியோ எடுக்கக்கூடாது எனத் தடுத்த விக்னேஷ் சிவன், தன்னுடன் அழைத்து வந்த வீடியோகிராபரை விடியோ எடுக்க வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அப்போது போட்டோ எடுக்க முயன்ற செய்தியாளர் முயன்ற போது , ‘’சாமி கும்பிடுகிற இடத்தில் கூட இப்படி நடந்து கொள்ள வேண்டுமா?’’ என நயன்தாரா எரிச்சலானார்.