வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை -1’ ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை -1’ ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. தெலுங்கில் அல்லு அரவிந்தின் ‘கீதா ஆர்ட்ஸ்’ இந்தப் படத்தை வெளியிடவுள்ளது.
மேலும், இந்தப் படம் இந்த ஏப்ரல் மாதத்தில் தெலுங்கில் வெளியாகுமெனத் தெரிகிறது. ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘விடுதலை -1’ திரைப்படம் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் இன்னும் நான்கு மாதங்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.