கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெகுநாட்களாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தைவானில் நடந்து வருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெகுநாட்களாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தைவானில் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்த காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தகட்டமாக தென் ஆப்ரிக்காவிலும் நடக்கவுள்ளது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தோடு இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவாகுமெனத் தெரிகிறது. இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப் படம் பல ஆண்டுகளாக, பல தடைகளைத் தாண்டி உருவாகி வருகிறது. இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடித்த காளிதாஸ் ஜெயராம் இந்தப் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.