மனோஜ் பாரதிராஜா முதன் முதலாக இயக்கும் ‘மார்கழி திங்கள்’ என்கிற படத்தில் பாரதிராஜா ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மனோஜ் பாரதிராஜா முதன் முதலாக இயக்கும் ‘மார்கழி திங்கள்’ என்கிற படத்தில் பாரதிராஜா ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது அந்தப் படத்திலிருந்து பாரதி ராஜாவின் ஃபர்ஸ்ட் லுக் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று முன்தினம் (ஏப்ரல் 3) தனுஷ் வெளியிட்டார். இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் எடுக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ’தாஜ்மகால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன்பு ‘பாம்பே’, ‘எந்திரன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.