ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் ட்ரெய்லர் நாளை (ஏப்ரல் 5) வெளியாகுமென அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் ட்ரெய்லர் நாளை (ஏப்ரல் 5) வெளியாகுமென அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் நாளை நடக்கவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ட்ரெய்லரும் வெளியிடப்படவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே ‘பாடாத பாட்டெல்லாம் ரீமிக்ஸ்’, ‘பகை முடி’ , ‘உன்னோடு வாழும்’ என மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை கதிரேசன் இயக்கியுள்ளார். லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, சரத்குமார் வில்லனாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் பூர்ணிமா பாக்கியராஜ், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.