ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படம் நாளை வெளியாகிறது.
சிம்பு - கெளதம் கார்த்திக் நடிப்பில் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி நாளை(மார்ச் 30) வெளியாகவுள்ள ’பத்து தல’ படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் தனஜ்ஜெயன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘சிம்புவின் நடிப்பு நெருப்பு போன்று உள்ளது. கௌதம் கார்த்திக் ஓருவித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் நிச்சயம் வசூலில் மாபெரும் சாதனை படைக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். இவரது பதிவு தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்த நிலையில், தற்போது தனஜ்ஜெயனின் இந்தப் பதிவு அதை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், மனுஷ்யபுத்திரன், ரெடின் கிங்ஸ்லி, தீஜே, கலையரசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.