பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘அதிபுருஷ்’ திரைப்படம் வரும் ஜூன் 16ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
பிரபாஸ் நடிப்பில், பிரம்மாண்டமாக 3D முறையில் உருவாகும் ’ஆதிபுருஷ்’ வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகுமென அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராமனாக பிரபாஸும் ராவணனாக சைப் அலி கானும் நடிக்கவுள்ளனர். ஓம் ரௌட் இயக்கும் இந்தப் படத்தை ‘T series' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. அதைக் கண்ட ரசிகர்கள், படம் கார்டூன் போல் உள்ளது எனவும், திரைப்படத்திற்கான நேர்த்தி இல்லை எனவும் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.