முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துரமலிங்கம்’ படத்தின் டீசர் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாகுமென அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆர்யாவும் முத்தையாவும் சேர்ந்து பணியாற்றும் முதல் படமாகும். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்த சித்தி இத்னானி நடித்துள்ளார்.
மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுப்படுத்தும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் இளைஞனின் கதையாக இந்தப் படம் உருவாகுவதாகத் தெரிகிறது. இதில் ஆர்யா ஒரு முஸ்லிம் இளைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.