ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ‘மான் கராத்தே’ என்கிற படத்தில் 2014ஆம் ஆண்டு நடித்திருந்தார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘1947’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் பற்றிய நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது விரைவில் ஏ.ஆர்.முருகதாஸுடன் சேர்ந்து ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றவிருப்பதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமெனவும் தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ‘மான் கராத்தே’ என்கிற படத்தில் 2014ஆம் ஆண்டு நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த ஐந்து வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் உள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ SK 21'இல் நடிக்கவுள்ளார். அதுபடி, இவர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் படம் 2023இன் இறுதியில் அல்லது 2024இன் ஆரம்பத்தில் தான் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.