’ஜப்பான்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் -2’ ரிலீஸுக்கு தயராகியுள்ளது. அந்தப் படத்தின் புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை (மார்ச் 29) நடைபெறவுள்ளது. இந்நிலையில் கார்த்தி தனது 26ஆவது திரைப்படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளார். நலன் குமாரசாமி இயக்கும் இந்தப் படம் நேற்று (மார்ச் 27) பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை காயத்ரி பரத்வாஜ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் மற்றும் அதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட்கள் அப்படக்குழுவால் வெளியிடப்படுமெனத் தெரிகிறது. தற்போது கார்த்தி தனது 25ஆவது திரைப்படமான ராஜு முருகன் இயக்கும் ’ஜப்பான்‘ படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.