’கேப்டன் மில்லர்’ லொகேஷன் இது இல்லங்க - விளக்கமளிக்கும் அருண் மாதேஸ்வரன்

’கேப்டன் மில்லர்’ லொகேஷன் இது இல்லங்க - விளக்கமளிக்கும் அருண் மாதேஸ்வரன்
’கேப்டன் மில்லர்’ லொகேஷன் இது இல்லங்க - விளக்கமளிக்கும் அருண் மாதேஸ்வரன்

அருண் மாதேஸ்வரன் இயக்கதில் தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அருண் மாதேஸ்வரன் தற்போது தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நடைபெறுவதாகத் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் பலர் இந்தப் படப்பிடிப்பு, அங்குள்ள வனவிலங்குகளுக்கு ஆபத்தாக முடியுமென அதை எதிர்த்தனர். 

இந்நிலையில், இந்தப் படப்பிடிப்பு புலிகள் சரணாலயப் பகுதிகளில் நடைபெறவில்லை என்றும், ஒரு தனியார் இடத்தில் தான் நடைபெற்று வருகிறது என்றும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com