அல்போன்ஸ் புத்திரன் இயக்கி 2015இல் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கி கடந்த 2015 இல் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மலையாளத்தை விட தமிழ் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது அவர் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் எடுத்த முதல் படமான ‘நேரம்’ நிவின் பாலி - நஸ்ரியா நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் இயக்கினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஒரு ரொமாண்டிக் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் தெரிகிறது. இந்தப் படத்தை பல பான் இந்திய நடிகர்களை வைத்து இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் -நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோல்டு’ திரைப்படம் மாபெரும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.