சினிமா
சமுத்திரக்கனி - பவன் கல்யாண் இணையும் தெலுங்கு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமுத்திரக்கனி - பவன் கல்யாண் இணையும் தெலுங்கு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமுத்திரக்கனி பவன் கல்யாணை வைத்து எடுக்கும் தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுத்திரக்கனி பவன் கல்யாணை வைத்து எடுக்கும் தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘வினோதய சித்தம்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். இந்தத் திரைப்படத்தில் நடிகர் பவன் கல்யாணுடன் சேர்ந்து சாய் தரம் தேஜும் நடித்துள்ளார். மேலும், இந்தப் படம் சமுத்திரக்கனி தெலுங்கில் இயக்கும் மூன்றாவது படமாகும். இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டு ’சம்போ சிவ சம்போ’, 2015இல் ‘ஜண்ட பை கபிராஜூ’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.