மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யராய், குந்தவையாக திரிஷா, அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்
மேலும் இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றியைக் கொண்டாடியது. மக்களால் கொண்டாடப்பட்ட இப்படம் 500 கோடி வசூல் செய்து சாதனையை படைத்தது.
மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பினை தொடர்ந்து “அக நக” பாடலின் லிரீக்கள் வீடியோவை படக்குழு அண்மையில் வெளியிட்டது. அதன்பின், படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் ட்ரெய்லர் 29ம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளது. மேலும் இதோடு இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் இரண்டாம் பாகத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.