ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கத்தில் 1958ஆம் ஆண்டு வெளியான ‘வெர்டிகோ’ திரைப்படத்தின் ரீமேக்கில் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு
ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கத்தில் 1958-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வெர்டிகோ’. இந்தப் படம் மிகப்பெரியளவில் ஹிட்டானது. இப்படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கிய ‘வெர்டிகோ’ திரைப்படத்துக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு, இப்படம் ‘ஃப்ரொம் அமாங் தி தெட்’ எனும் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது கூடுதல் தகவல்.
இந்நிலையில், இப்படத்தை சமகாலத்துக்கு ஏற்றவாறு நவீனத்துவத்துடன் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம். அவெஞ்சராக ஆக உலகளவில் கலக்கிய ராபர்ட் டௌனி ஜூனியர் கச்சிதமான தேர்வு என்றே ரசிகர்களும் கூறிவருகிறார்கள்.