ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘தீரா காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘தீரா காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘பெட்ரொமேக்ஸ்’, ‘அதே கண்கள்’ ஆகிய படங்களை இயக்கியவராவார்.
இந்தப் படத்திற்கு நீலமங்களம் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார். சித்து குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வசனங்களை ரோஹினுடன் சேர்ந்து ஜி.ஆர்.சுரேந்திரநாத் எழுதியுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அப்படக்குழுவால் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.