அருண்ராஜா காமராஜ் டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெப் சீரீஸ் ஒன்று இயக்கவுள்ளார்
அருண்ராஜா காமராஜ் டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெப் சீரீஸ் ஒன்று இயக்கவுள்ளார். ‘லேபில்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரீஸின் மூலம் ஓடிடி தளத்தில் முதன்முறையாக அருண்ராஜா காமராஜ் அறிமுகமாகவுள்ளார். இந்த சீரீஸின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீரீஸில் ஜெய், தான்யா டோப், மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இதற்கு முன்பு அருண்ராஜா இயக்கத்தில் உதநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.