கடந்த நான்கு வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த சுப்ரமணியம் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் (85) இன்று (மார்ச் 24) அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த நான்கு வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த சுப்ரமணியம் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை உறக்கத்திலேயே இயற்கை எய்தினார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அஜித் தந்தை உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் தமிழ் திரை உலகில் பல்வேறு நடிகர், நடிகைகளும் அஜித்தின் தந்தை மறைவுக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் அஜித் ரசிகர்கள் அவரது தந்தை மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அஜித் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.