வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்த “கஸ்டடி” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கு - தமிழ் என இரு மொழிகளில் தயாராகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (மார்ச் 22) உகாதி பண்டிகையை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் அரவிந்த் சுவாமி, பிரியாமணி, ராம்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் முதன்முறையாக யுவன் சங்கர் ராஜாவும் - இளையராஜாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.