சினிமா
’வேதாளம்’ தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வேதாளம்’. இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது.
அஜித்குமார், சுருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வேதாளம்’.
தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவி நடிக்க, ‘போலா சங்கர்’ என்கிற பெயரில் வருகிற ஆக.11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தை மேகர் ரமேஷ் இயக்கியுள்ளார். இதில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ஜோடியாக தமன்னாவும் நடித்துள்ளனர். ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்ததும் குறிப்பிடத்தக்கது.