மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என தகவல்
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார் மாரி செல்வராஜ்.
இரண்டு வருடங்களுக்கு முன்பே மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கப் போவதாகவும், அப்படத்தினை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பதாக ஒப்பந்தமானது.
கபடியை கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்திற்காக தற்போது துருவ் விக்ரம் கபடி பயிற்சி செய்து வருகிறார்.
‘மாமன்னன்’ படவேலைகள் முடிந்ததும் தென்மாவட்டங்களை களமாகக் கொண்ட ‘வாழை’ திரைப்படத்தை 20 நாட்களில் படமாக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார். அதற்கு பின்னரே துருவ் விக்ரம் படத்தை மாரி செல்வராஜ் எடுக்கத் தொடங்குவார் எனத் தெரிகிறது.