சினிமா
’சூரரை போற்று’ இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
’சூரரை போற்று’ இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சுதா கொங்கராவின் சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் படம் வரும் செப்.1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சூரரை போற்று’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தையும் சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருகிற செப்.1ஆம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்க, அபர்னா பாலமுரளி கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் பரேஷ் ராவல், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.