‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகர் ஆரி நடிப்பில் வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்த ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
அறிமுக இயக்குநர் கவிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம், ஏலியன்கள் கண்டுபிடித்த ஓர் கருவி பூமியில் ஒரு மனிதன் கையில் சிக்கினால் என்ன ஆகும்..? என்கிற ஒன் லைனைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
மேலும், இந்தத் திரைப்படத்தில் ஆரியுடன் சேர்ந்து மொட்டை ராஜேந்திரன், தீனா, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.