‘நாங்க பத்திரமா இருக்கோம்’ - காஷ்மீரில் உள்ள ’லியோ’ படக்குழு

‘நாங்க பத்திரமா இருக்கோம்’ - காஷ்மீரில் உள்ள ’லியோ’ படக்குழு
‘நாங்க பத்திரமா இருக்கோம்’ - காஷ்மீரில் உள்ள ’லியோ’ படக்குழு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

தற்போது இந்தப் படக்குழு காஷ்மீரில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று (மார்ச் 21) ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதன் அதிர்வுகள் இந்தியாவில் டெல்லி, காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டது. 

இதையடுத்து அப்பகுதிகளில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவ, அங்கு முகாமிட்டுள்ள ‘லியோ’ படக்குழுவினர் தாங்கள் பத்திரமாக இருப்பதாக தங்களின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளனர். 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், திரிஷா, சஞ்சய் தட், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 

மேலும், இந்தத் திரைப்படம் வருகிற அக்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com