நகைச்சுவை கலைஞர் கோவை குணா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
‘கலக்கப் போவது யாரு’, ‘அசத்தப் போவது யாரு’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ‘கோவை குணா’. கவுண்டமணி, சிவாஜி போன்ற நடிகர்களைப் போல் மிமிக்கிரி செய்து ரசிகர்களை ஈர்த்தவர்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் தவித்து வந்தார். உடல் நலக்குறைவு இருப்பினும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், கடந்த 7-8 மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.