சினிமா
கிஷோர் நடிக்கும் கன்னட ஆந்தாலஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘காந்தாரா’ தொடர்ந்து மீண்டும் கன்னட சினிமாவில் கிஷோர்
நடிகர் கிஷோர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட ஆந்தாலஜி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொல்லாதவன், ஹரிதாஸ், ஆடுகளம், விசாரணை, வடசென்னை என தமிழில் கவனமீர்த்த படங்களில் முக்கிய ரோல்களில் நடித்தவர் நடிகர் கிஷோர்.
கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து லைக்ஸ் அள்ளினார். இந்நிலையில், மீண்டுமொரு கன்னட சினிமாவில் நடித்திருக்கிறார் கிஷோர். இவர் நடிப்பில் ஐந்து வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கத்தில் ‘பெண்டகன்’ எனும் ஓர் ஆந்தாலஜி உருவாகியுள்ளது.